லடாக்கில் நிலவிவரும் பதற்றம்: மீண்டும் எல்லை மீறிய சீனா

பாங்காங் திசோவில் நுழைய முயன்ற சீனப் படையை துரதியடித்த இந்தியா

நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்துள்ளதாகவும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டு இருக்கிறது 

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் மோதல் நிலவி வருகிறது. கடந்த மே மாதம் லடாக் மற்றும் சிக்கிம் அருகே சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது எல்லையில் சின்ன மோதல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து லடாக் பகுதியில் மோதல் அதிகரித்தது. கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா – சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அதன்பின் ஜூலை 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் 2 கிமீ தூரத்திற்கு படைகளை திரும்பப்பெற ஒப்புக்கொண்டன. ஆனால் லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் சில இருந்தது. அங்கு லேசான பதற்றம் நிலவி வந்தது.

பான்காங் திசோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை தயார் நிலையில் இருந்த இந்தியப்படை விரட்டியடித்தது. சீனாவின் அத்துமீறலை இந்தியா எதிர்பார்த்தே இருந்தது. எல்லைப் பேச்சுவார்த்தையை மீறி சீனா செயல்பட முயல்கிறது.

இந்தியா அங்கு தற்போது படைகளை குவித்து பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து பணிகளையும் செய்யும், இந்திய எல்லையை காக்க அனைத்து பணிகளையும் செய்வோம் என்று, என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version