உலகளவு நடந்த தொழில்நுட்ப ஆய்வில் வல்லரசு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா
இணையதள உபயோகத்தில் மிகப்பெரிய அளவில் இந்தியா இருக்கிறது. சீனாவைத் தொடர்ந்து உலகில் 2ஆம் இடத்தில இந்திய ஆன்லைன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்நிலையில் 85 நாடுகளுடன் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் இணையதள தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், எல்லோரும் கிடைக்கும் விதமாக விலை மலிவாக இருப்பதாகவும் முடிவுகள் வெளியாகின.
தரத்தில் உலகளவில் டென்மார்க் முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தியா 79ஆம் இடத்தில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. அமெரிக்க கண்டத்தில் கனடாவும், ஆசியாவில் ஜப்பானும், ஆப்பிரிக்காவில் தென் ஆப்பிரிக்கா நாடும் முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு தெரிவித்தது
எனினும் விலை குறைவாக சேவைகள் வழங்கி அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 9ஆம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையதள சேவைகளில் மேலும் பல முன்னேற்றங்களை இந்தியா அடையவேண்டும் என்பதே மக்கள் நோக்காக இருக்கிறது