கால்பந்துதொடரின் போட்டி வாய்ப்பை நிராகரித்தது இந்தியா

லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவானது சர்வதேச போட்டியில் விளையாட முடிவு செய்தது. அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்தியாவுடன் மோத வேண்டும் என விரும்பி, இந்திய கால்பந்து சம்மேளனத்தை சமீபத்தில் அணுகி உள்ளது. ஆனாலும் உலக சாம்பியனுக்கு எதிராக விளையாட கிடைத்த இந்த ஒரு அரிய வாய்ப்பினை இந்திய கால்பந்து சம்மேளனம் ஏற்க மறுத்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷஜி பிரபாகரன் அவர்கள் கூறும்போது, ‘அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய தொகையைதான் செலவிட நேரிடும். அதற்கு வலுவான ஸ்பான்சர்ஷிப் தேவை. அர்ஜென்டினா அணிக்கான போட்டி கட்டணமும் மிக மிக அதிகம். அந்த அளவுக்கு எங்களிடம் நிதிஆதாரம் இல்லாததால் வாய்ப்பை தவிர்க்க வேண்டியதாகி விட்டது என அவர் விரிவாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version