
ராணுவ துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் ராஜ்ய சபாவில் நேற்று பேசியதாவது, இந்தியாவின் வடக்கு எல்லையில் நிலவும் பதற்றம் மற்றும் ஏற்படுன்கின்றஅச்சுறுத்தலை சமாளிக்க அங்குள்ள ராணுவத்தினருக்கு ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை அவசர கால அடிப்படையின் பெயரில் கொள்முதல் செய்யப்படுகின்றன.
எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தினர் தற்போதுள்ள சூழலை எதிர்கொள்ளவும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தட்ப வெப்ப நிலையை சமாளிக்கவும் தேவையான சாதனங்கள் வழங்கப்படுகின்றன. அவை ராணுவத்தினரின் தாக்குதல் திறனை அதிகரிக்கவும் சூழ்நிலைக்கு ஏற்றாவாறு செயல்படவும் உதவும்.
சீன எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள நம் ராணுவத்தினரின் குடும்பத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தலைமையகத்திற்கு மூன்று ஆண்டுகளாக எந்த புகாரும் வரவில்லை.பிராந்திய அளவில் வரும் புகார்களுக்கு அந்தந்த மட்டங்களில் தீர்வு காணப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
லடாக் எல்லையின் கிழக்கு பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பு முயற்சியை தடுக்க 50 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல சீனாவும் ராணுவத்தை நிறுத்தியுள்ளது.
இதனால் எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க இதுவரை ஒன்பது முறை இரு தரப்பு ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.