சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்!!!

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்.. ரூ.82 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், எச்.டி.எப்.சி. உள்பட முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லை.

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது, பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான சூழல் இல்லாதது போன்ற பல காரணங்களால் பின்னர் பங்கு சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, மாருதி சுசுகி, இன்போசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.06 புள்ளிகள் சரிந்து 37,736.07 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 100.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,102.15 புள்ளிகளில் முடிவுற்றது.

Exit mobile version