இந்திய விமானப் படை தினம் கொண்டாட்டம்…

இந்திய விமான படை கொண்டாட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.

இந்திய விமானப் படை ஆங்கிலேயர் காலத்தில் 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.

தற்போது உலகிலேயே மிகப்பெரிய விமானப் படைகள் வரிசையில் இந்திய விமானப் படை 4-வது இடம் வகிக்கிறது.

இந்திய வான் எல்லையை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதும், எதிரிகள் தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பதும் விமானப் படையின் முக்கியப் பணியாகும்.

தற்போது இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களை கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாக திகழ்கிறது. அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன. இப் படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதற் பெரும் படைத்தலைவர் ஆவார்.

Exit mobile version