மகாராஸ்டிராவில் டிராக்டர் மூலம் பசுக்களில் இருந்து ஒரு விவசாயி பால் கறக்கும் வேலையை மிக எளிதாக செய்து அசத்தி வருகிறார். அவரை மஹிந்திரா நிறுவ ன தலைவர் பாராட்டியுள்ளார்.

விவசாயம் தற்போது நவீனமயமாகி வரும் நிலையில் எத்தனையோ விவசாய இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த இயந்திரங்கள் மனித உழைப்பை மிச்சமாக்கி வருகின்றன. அப்படி அறிமுகமாகும் இயந்திரங்கள் பொறியாளர்களால் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு உருவாக்கப்படுகிறது. ஆனால் மஹாராஸ்டிராவில் ஒரு விவசாயி தனது டிராக்டரை பசுவிடம் இருந்து பால் கறக்க பயன்படுத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பால் கறக்கும் இயந்திரங்கள் நிமோட்டிக் அதாவது காற்றை உறிஞ்சும் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படுகிறது. இதையே தான் அந்த தொழிலாளியும் பயன்படுத்தியுள்ளார். தனது டிராக்டரில் உள்ள ஏர் ஃபில்டரை நீக்கிவிட்டு அதில் ஒரு குழாயை சொருகி பால் கறக்கும் இயந்திரத்தோடு இணைத்துள்ளார் அந்த விவசாயி. டிராக்டரை ஓட விட்டால் ஏர் ஃபில்டரில் இணைக்கப்பட்டுள்ள குழாய் காற்றை உறிஞ்சும் ஏர் சக்ஷ்னாக மாறுகிறது. இதையடுத்து பால் கறக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி 2-3 நிமிடங்களில் பால் கறக்கும் பணியை முடிக்கிறார் அந்த விவசாயி. இந்த வில்லேஜ் விஞ்ஞானியின் செயலை கண்டு பலரும் வாயடைத்து போயுள்ளனர். மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் அதில் ஒருவர். உடனடியாக அந்த விவசாயியை அழைத்து பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார். என்னமா யோசிக்கிறாங்க…
சுரா-