ஐபிஎல் -2020; இன்றும் இரண்டு போட்டிகள் … அனல் தெறிக்குமா ? ஜெயிக்கப்போவது யார்?

மும்பை அணி vs ஹைதராபாத் ; சென்னை அணி vs பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர் , கொரொனாவால் இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு மேட்சுகளும் வாழ்வா சாவா என்று பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில்,  மும்பை அணி vs ஹைதராபாத் அணியும், சென்னை அணி vs பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

ஷார்ஜாவில் இன்று மாலை 3;30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி களம் காண்கிறது.

இந்த இரு அணிகளும் இதுவரை 14 மேட்சுகளில் விளையாடியுள்ளனர். இதில் மும்பை அணி 7 மேட்சுகளிலும்,  ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் இன்று 7:30 மணிக்கு தோனி தலைமையிலான சென்னை அணியும் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இந்த இரு அணிகளும் இதுவரை 21 முறை களம்கண்டு,அதில் சென்னை அணி 12 முறை வெற்றிபெற்றுள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இன்றைய போட்டிகளில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்று  ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version