ஐபிஎல்-2020; இன்று பெங்களூரு vs ராஜஸ்தான், டெல்லி vs கொல்கத்தா அணிகள் மோதல் !

இன்று பெங்களூர் அணி  ராஜஸ்தான் அணியுடனும், டெல்லி அணி கொல்கத்தா அணியுடனும் மோதுகின்றன.

இன்று பெங்களூர் அணி  ராஜஸ்தான் அணியுடனும், டெல்லி அணி கொல்கத்தா அணியுடனும் மோதுகின்றன.

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி இந்த வருடம் உலகெங்கும் பரவியுள்ள கொரானா தாக்கத்தால் நடைபெறவில்லை.

ஆனால் எப்படியும் இந்த வருடத்தில் ஐபிஎல்-2020 தொடரை நடத்தியே ஆக வேண்டுமென பிசிசிஐ முடிவாக இருந்தது.

பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதிலிருந்து சில வீரர்கள் வெளியேறினதால் சர்ச்சை ஆனது. ஆனாலும் எதிர்பாராத விதத்தில் மேட்ச் தினமும் த்ரிலிங்காக் நடைபெறு வருகிறது. அத்துடன் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3;30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்மித் தலைமையிலான   ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தன் அணி 10 முறை வெற்றியும், பெங்களூர் அணி 8 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

அதேபோல், இன்று மாலை 7;30 மணி நடைபெறும் மற்றோரு ஆட்டத்டில் ஸ்ரேயா அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளி மோதியுள்ளன. இதில்  கொல்கத்தா அணி 13 போட்டியிலும், டெல்லி அணி 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version