மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கவலையில் தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி உள்ளார்.

ஐபிஎல் 2018 சீசனில் இருந்து தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிக்கெதிராக முதல் ஆட்டத்தில் லுங்கி இங்கிடி 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

அதன் பின்னர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் கடைசி ஓவரில் நான்கு சிக்சர்கள் விட்டுக்கொடுக்க, 4 ஓவரில் 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதனால் 3-வது போட்டி முதல் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தொடர்ச்சியாக 5 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் மீண்டும் அணிக்குத் திரும்ப முடியுமா என்ற கவலையில் உள்ளார்.

பவர்பிளே ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசும் லுங்கி இங்கிடியை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளார். தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வரும் சென்னை அணி இங்கிடி மூலம் வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர்.

Exit mobile version