சட்டத்தை மீறு…நடவடிக்கை எடுப்போம் பாரு…பா.ஜ.கட்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

பா.ஜ.க தனது வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் பா.ஜ.க மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் நிலை ஏற்படலாம்.

வேல் யாத்திரை மூலம் மக்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை என்பதை அனைவரும் உணர்ந்தால் நல்லது.சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும், இல்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Exit mobile version