ஜம்மு – காஷ்மீர் முழுவதும் 4ஜி இணைய சேவை மீண்டும் துவக்கம்

”ஜம்மு – காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் 4ஜி இணைய சேவை மீண்டும் துவங்கப்படும்” என, மின்சாரம் மற்றும் தகவல் துறையின் முதன்மை செயலாளர், ரோஹித் கன்சால் 5.2.2021 அன்று அறிவித்துள்ளார். மேலும், இணைய சேவை வழங்கப்படிருந்தாலும் அதிவேக இணைய சேவை எப்போது கிடைக்குமென்று கூற இயலாது எனவும் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.

2019 செப்டம்பர் 5 அன்று, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்த அரசியல் சாசனத்தின் 370 வது சட்டப்பிரிவை நீக்கி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. அப்போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இணைய சேவைகள் 18 மாதங்களுக்கு நிறுத்தப்பட்டன.

ஜனவரி22, 2012 அன்று 2ஜி சேவையை மட்டும் வழங்கி அதிவேக இணையத்துக்கான தடையை பிப்ரவரி 6 வரை அரசு நீட்டித்தது . காண்டர்பால் மற்றும் உதம்பூர் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டன.இந்நிலையில் தடை காலம் முடிந்துள்ளதால் மீண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, “ ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மொபைல்களுக்கும் 4ஜி இணைய சேவை கிடைத்துள்ளது. ஆனால் முன் எப்போதும் இல்லாததை விட தடை காலம் அதிகம்” என ட்வீட் செய்துள்ளார்.

Exit mobile version