கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் அதிமுனவினருக்கு உத்தரவு.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் அதிமுனவினருக்கு உத்தரவு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் அக்கட்சியில் நடக்கும் குழப்பங்களும், சர்ச்சைகளும் அதிகரித்தபடி உள்ளன.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தார். அதேசமயம் தேனியில் ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதவரவாளர்கள் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்று முழக்கமிட்டனர்.

இந்நிலையில் கட்சியின் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்கள்,சர்ச்சைகளைத் தீர்ப்பதற்க்காக அமைச்சர் இன்று கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது எனவும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை எனவும் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version