மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் நீதிமன்ற உத்தரவின்படி அவரது குடும்ப உறுப்பினர்கள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
போயஸ் தோட்டத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை ‘அரசுடைமையாக்கியது செல்லாது’ என்ற நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அந்த இல்லத்தின் சாவியை விரைந்து தங்களிடம் ஒப்படைக்குமாறு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபா, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று ஒப்படைத்துள்ளார்.