வேலை செய்யும் காப்பாளரை தன்னிடம் விளையாட சொல்லி குட்டியானை ஒன்று குறும்பு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் இணையதளத்தில் கண்ணுபிரேம் என்பவர் வெளியிட்ட வீடியோவில் குட்டியானை ஒன்று தனது காப்பாளரை பணி செய்ய விடாமல் தன்னுடன் விளையாட அழைக்கிறது. அவரோ குட்டியானையை கண்டுகொள்ளாமல், தனது பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து குட்டியானை அவரது பணிகளுக்கு இடையூறாக சென்று நிற்கிறது.
இறுதியில் அவரை கீழே தள்ளி கைக்குழந்தையை போல அவர் மீது படுத்து அவரை கொஞ்சுகிறது. மேலும் தும்பிக்கையால் அவரது முகத்தை வருடி அவரிடம் செல்ல சண்டை போடுகிறது.
காண்போரை குஷிப்படுத்தும் இந்த வீடியோலை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். குழந்தைக்கு இணையாக தனது காப்பாளரிடம் சேட்டை செய்யும் இந்த குட்டியானை பலரது லைக்ஸ்குகளை அள்ளியுள்ளது.