கே.எஸ்.அழகிரி அறிக்கை: குஷ்பூ பா.ஜ.க வில் இணைந்தது குறித்து பேச்சு!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.என்று கூறியிருக்கிறார்.

குஷ்பு பா.ஜ.க.வில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி. நிர்ப்பந்தம் காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.

இதன் மூலம் நீண்டகாலமாக அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையை பா.ஜ.க.விடம் அடகு வைத்திருக்கிறார். குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துகிற பணியில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாதவர். அவர் கட்சியை விட்டு விலகுவதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை. அதேபோல, பா.ஜ.க.வில் சேருவதனால் எந்த லாபமும் அந்தக் கட்சிக்கு ஏற்படப்போவதில்லை. எந்த வகையிலும், யாருக்கும் எந்த பயனும் தரப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version