கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆலங்காடு பகுதியில் பாசன வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பாசன வாய்க்கால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைரவன் இருப்பு முதல் கோடங்குடி வரையிலும் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலை நம்பி வைரவன் இருப்பு, அரசூர், தில்லைநத்தம், ஜீவா நகர், தண்டேசநல்லூர், திருநாங்கூர், ஆர்ப்பாக்கம், உமையாள்பதி, ஆலங்காடு, கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகிறது.இந்த வாய்க்காலை கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் தூர்வாராததால் தற்பொழுது வாய்க்கால் செடி கொடிகள் மண்டி பாசன நீர் வராத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாகவே மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மேற்கண்ட வாய்க்காலை தூர்வார கேட்டு ஆலங்காடு ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் நேற்று சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அப்போது, இந்த ஆண்டு பாசன வாய்க்காலை தூர் வார வில்லை என்றால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியாகிவிடும் எனவே அரசு விவசாயிகள் கோரிக்கை ஏற்று உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என அதிகாரி கூறியுள்ளார்‌.

Exit mobile version