மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்-திறக்கப்பட்டன கதவுகள்

5 மாதத்திற்க்கு பின்னர் திறப்புக்குத் தயாராகும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பக்கத்தர்கள் ஆனந்தம்

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டிருட்ந்து. தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னையிலும் பிரபலமான கோவில்கள் மூடப்பட்டதால் அன்றாடம் கோவில் செல்லும் அனைத்து பக்தர்களும் கவலையில் இருந்தனர்.

தற்போது எடப்பாடி அவர்கள் வெளியிட்ட தகவலின் படி. கோவில்கள் அனைத்தும் செயல்படலாம். ஆதாலால், மைலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் ஆலயம் விருவிருப்பாக சுத்தம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.

சுமார் 5 மாத இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுத்தம் செய்ய ஊழியர்கள் ஆனந்தமாக செயல்ப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்துகொள்வது அவசியம். பக்தி வெள்ளத்தில் மக்கள் சுத்ததையும் கைவிடக்கூடாது என்பதற்க்காக இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியாக ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

பூஜை மற்றும் அபிஷேகத்தின்போது பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வது கூடாது. பக்தர்கள் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை வழங்கி வழிபட தடை செய்யப்பட்டுள்ளது. கொடிமரம் உள்ளிட்ட ஏனைய இடங்களில் அமர்வது, விழுந்து வணங்குதலைத் தவிர்க்கவும். வழிபாட்டுத் தலங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும்.

கோவில்கள் திறக்கப்பட்டாலும் பல விதிமுறைகளுடன் தான் செயல்பட உள்ளது.

Exit mobile version