பாருக்குள்ளே நல்ல நாடுதான்… நம்பியதில் பிசகில்லை – கமல் டுவீட்

காந்தி ஜெயந்தியை நாளில் வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் கமல்.

காந்தி ஜெயந்தியை நாளில் வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் கமல்.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல் கட்சித் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் பிரபல திரை நட்சத்திரங்களும் வாழ்த்துகள் தெரிவித்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘’பாருக்குள்ளே நல்ல நாடுதான்… நம்பியதில் பிசகில்லை. நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால், நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும். ஜெய்ஹிந்த்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி,  டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version