தனது தமிழ் மொழி ஆளுமையில் நம்மை வியக்கவைத்து.தனது கவிதைகளால் நம்மைக் கட்டிப்போட்ட ஒரு அற்புதக் கலைஞன் கண்ணதாசன் அவரது நினைவு நாளான இன்று அவரைப் பற்றி சில சுவாரஸ்யமான செய்திகள்..

ஒரு தத்துவஞானி, கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், ஆசிரியர், பரோபகாரர், மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் மிக முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர்.
கவியராசு என்று அடிக்கடி அழைக்கப்படும் கண்ணதாசன், 6000 கவிதைகள் மற்றும் 232 புத்தகங்களைத் தவிர சுமார் 5000 திரைப்பட பாடல்கள் வழங்கியவர், நாவல்கள், காவியங்கள், நாடகங்கள், கட்டுரைகள் உட்பட இந்து மதம் பற்றிய 10 பகுதி மத புத்தகம், அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தரமான புத்தகம் அவரது மற்றுமொரு மாபெரும் படைப்பு.
அவரது மகன் தனது பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு…இதோ உங்கள் பார்வைக்கு
விருதுகள்: 1980 ஆம் ஆண்டில் தனது சேரமான் காதலி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார், மேலும் 1969 ஆம் ஆண்டில் குழந்தைக்காக படத்திற்காக வழங்கப்பட்ட சிறந்த பாடல்களுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றவர் ஆவார்.
முதல் படம்: கன்னியின் காதலி. இசை அமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு
அவர் எழுதிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சில…
எல்லோரும் கொண்டாடுவோம்..
நான் பேச நினைப்பதெல்லாம்..
மலர்ந்தும் மலராத…
நிலவும் மலரும் பாடுது…
சொல்லிக் கொண்டே போகலாமே இந்த மேதையின் படைப்புகளை…
கவிஞர் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் காதலைப் பாடினாலும், நம் கண்ணதாசனின் கைகளில் காதலே தன்னைப் பாடு பாடு என்று சொல்வது போன்று உள்ளது!
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை..
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை..
அண்ணனும், தங்கையும், ஒவ்வொரு இடத்தில் அவரவர் பிள்ளையை வைத்துக் கொண்டு பாடும் பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை யாரும் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள்…
யானை படை கொண்டு
சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா..
சோகத்தைச் சொல்வதில் இவரை மிஞ்ச ஆளில்லை…
என் இதயத்தில் பூட்டி வைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்..
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
இவரது ஞானத்தை, சொற்களைத் தொடுக்கும் அந்த அழகை எவ்வளவு வர்ணித்தாலும் போதுமா…