கர்நாடகா மாநிலத்தில் அமலில் இருந்த இரவு நேர பொதுமுடக்கம் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு.
டெல்லி, சமீப மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் கூட அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் கர்நாடகா மாநிலத்தில் அமலில் உள்ள இரவு நேர ( இரவு 10 மணி முதல் காலை 05 மணி வரை ) பொதுமுடக்கம் திரும்ப பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும், குதிரை பந்தையங்கள் நடத்தாளம் எனவும் ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக குதிரை பந்தயம் நடைபெறும் அரங்கில் அமர்வோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசிக்களை எடுத்து கொண்டவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.