சசிகலாவிற்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த கருணாஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
முதல்வருக்கு வாழ்த்து
தனிச் சின்னம் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், தங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று முக்குலத்தோர் கருதுகின்றனர். எனவே, தேர்தல் நிலவரத்தைப் பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அ.தி.மு.க. தேர்வு செய்திருப்பது அவர்களது உரிமை. அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதற்கு மனப்பூர்வ வாழ்த்துகள்.
சசிகலாவிற்கு உறுதுணை
எந்தவொரு காலக்கட்டத்திலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது, எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படாது. இந்தக் கட்சி முக்குலத்தோரின் உரிமைகளை மீட்டெடுக்க இறுதி வரை போராடும்.
என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுடன் நீண்ட நாள் உடனிருந்து, அ.தி.மு.க.வின் அனைத்து நகர்வுகளிலும் முக்கியப் பங்காற்றியவர் சசிகலா. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.
எடப்பாடிக்கு அங்கீகாரம்
முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், குடிமராமத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மனதில் நீங்காத இடத்தை நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவசசிகலாவிற்கு என்றும் உறுதுணையாக இருப்போம்
கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
சென்னை, அக். 13-

இவ்வாறு அவர் கூறினார். ர் கூறினார்.