காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்!!!

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகின்றது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் வாயிலாக அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. எனினும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது

மான்கோட் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version