கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்ற இளைஞரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனால் இவரை சிறிது காலமாக நாம் மறந்துவிட்டோம். ஆண்கள் சமுதாயத்தின் மீது என்னதான் நல்ல அபிப்ராயம் தோன்றினாலும் அதை கெடுப்பதற்கென்று இது போல பலபேர் வரத்தான் செய்கின்றனர்.

என்னதான் பெண்கள் படித்து முடித்து பெரிய பெரிய வேளைகளில் இருந்தாலும், இவனை போல் காம கொடூரனின் வலையில் மிக விரைவாக விழுந்து விடுகின்றனர். அழகும் பணமும் தான் காசி போன்ற இளைஞர்களின் ஆயுதமாக இருக்கின்றது. இவரின் தப்புகள் நிருபிக்கப்பட்ட போதிலும் இவர் சாவகாசமாக தெருவில் திரிவது நம்முள் பலருக்கு வருத்தம் தான்.

இவரை நாம் என்றுமே மறந்துவிட கூடாது என்பதற்காக மீண்டும் ஒரு புதிய பிரச்னை இவர் தேடிக்கொண்டு சென்று இருக்கிறார். இந்நிலையில் காசி மீது 6 வழக்குகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பெண் புகார் அளித்ததால் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version