கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவாக இருக்கும் சாணி காயிதம் படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போதைய கோலிவுட்டின் பிஸி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்து வரும் அண்ணாத்தே படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், செல்வராகவன் நாயகனாக நடிக்கும் சாணி காயிதம். இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு பெண் ஒளிப்பதிவாளாரான யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.
அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, உங்களின் ஆசீர்வாதத்துடன் அடுத்த பயணத்தை தொடங்கி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இப்படத்திற்கு நடிகைகள் ராஷி கண்ணா மற்றும் சமந்தா ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.