பிரதமர் மோடி கேரளா விமான விபத்து ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் I.X.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த கோரா விபத்தில் விமானி உட்பட 17 பேர் பலியாகினர். மருத்துவமனையில் மேலும் சில பேர் கவலை கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி இந்த விபத்திற்கு ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் :
கேரள விமான விபத்தை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். தன் அன்புக்குரியவர்களை இழந்தவர்களை எண்ணி, என் மனம் வருந்துகிறது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் களத்தில் அதிகாரிகள் நிற்கிறார்கள் மீட்பு பணிகள் விரைவாக நடக்கின்றன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள்.என தனது டுவிட்டர் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.