கோடை சுற்றுலா என்றவுடன், குலுமனாலி, ஊட்டி, கேரளா, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள்தான் உடனே மனதில் நிழலாடும். ஆனால், தமிழகத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோடையின் உக்கிரத்தை தணித்து மனதை மகிழ்விக்கும் அழகிய இடங்கள் பல உள்ளன. அவற்றில், முதலிடம் பெறுவது கிருஷ்ணகிரி மாவட்டம்.
கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் பக்கத்து மாவட்டங்களை விட வெப்பத்தின் தாக்கம் குறைவுதான்.
இப்பகுதியில், ‘பாரா மகால்’ என அழைக்கப்பட்ட 12 கோட்டைகள் தென்னிந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில்
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் இடையே, இக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை பிரிகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் சிறிய மலைமீது அமைந்து இருக்கிறது. கோயில்வரை வாகனங்கள் செல்ல மலைப்பாதையும், பக்தர்கள் நடந்து செல்ல படிகளும் உள்ளன. பொதுவாக, சிவன் கோயில் மலைமீது காணப்படுவது அதிசயமான ஒன்று என்று சொல்வார்கள். இங்கு காளிகாம்பாள் சந்நதி இருப்பது கூடுதல் விசேஷம். இக்கோயிலுக்கு வருபவர்கள் மலை மீது இருந்தவாறு ஓசூரின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.
தளி
ஏராளமான ஏரிகள், சிறுசிறு மலைக்குன்றுகள் மற்றும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் தரும் எண்ணற்ற பள்ளத்தாக்குகளுடன் அமைதியான அழகிய சோலையைப்போல் காண்போரைக் கவரும் வகையில் இயற்கை எழிலுடன் காணப்படும் தளி கிராமம் ‘லிட்டில் இங்கிலாந்து’ என்ற பெருமைக்கு உரியது
ஓசூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் ஆண்டு முழுவதும் குளுமையான தட்பவெப்பம் கொண்டது
மாம்பழத் திருவிழா
கிருஷ்ணகிரிக்கு மிகவும் பக்கத்தில் உள்ள மகாராசகடை என்ற இடத்தில், 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் மாம்பழங்களை வைத்து திருவிழா நடத்துவது வழக்கம்
ராயக்கோட்டை
காவிரி ஆற்றில் அமைந்துள்ள இந்த அருவி தர்மபுரியில் இருந்து 46 கி.மீ. தொலைவிலும், பெங்களுரில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும்(தேசிய நெடுஞ்சாலை எண்-7 வழியாக) உள்ளது. ‘இந்தியாவின் நயாகாரா’ என்றழைக்கப்படும் இந்த அருவியின் பரிசல் பயணம், எண்ணெய் குளியல் மற்றும் மீன் பொரியல் மிகவும் பிரபலம்.