ஜெட் வேகத்தில் பறந்த கார்… ஓட்டியது ஒரு பெண்ணா?… வைரலாகும் சாகச வீடியோ…!!!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வேனை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சிமியோன் ஹாட்டன் மற்றும் பார்ட்னர் லியாம் ரட்ஸ் இருவரும் செஸ்டர் நகருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவர்களின் காரை சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு வேன் கடந்து சென்றது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிமியோன் ஹாட்டன் அந்த வேனைப் பின்தொடர்ந்து சென்று தன் போனில் வீடியோ எடுத்தார்.

அதில் வேனை ஓட்டியது பெண் டிரைவர் என்றும் ஒரு கையில் வேன் ஸ்டேரிங் கையும் மற்றொரு கையில் போனையும் பயன்படுத்தியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

சிமியோன் ஹாட்டன் வீடியோ எடுப்பதை பார்த்தவுடன் அந்த பெண் டிரைவர் முகத்தை மூடிக்கொண்டாள். உடனே சிமியோன் ஹாட்டன் ‘போன் பயன்படுத்திக் கொண்டே வேன் இயக்கிய பெண் டிரைவரின் சாகச வீடியோவை’ தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனைக் பார்த்த பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது அந்த பெண் முகநூல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது .

Exit mobile version