மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். அதன்பின் அவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து பிடித்தார். இவர் தற்போது விஜயின் நடிப்பில் உருவாகி வருகிற லியோ திரைபடத்தை இயக்கி வருகிறார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரித்து வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில், நிறைய படங்கள் இயக்க வேண்டும். நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. நான் தற்போது இந்த யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன். லியோ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாகவே உள்ளது. இன்னும் 10 நாட்களில் விஜய் உடனான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய்யை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எல்சியூ-வுக்கு கீழ் ‘லியோ’ வருமா என்பதை அறிய ஆவலோடு காத்திருங்கள்” என்றார் அவர்.
ஹைப்பை எகிறவைக்கும் “எல்.சி.யூ” அப்டேட்! லோகேஷ் வெறித்தனம்!
-
By mukesh

Related Content
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025