‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை

பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘அந்தகன்’ படத்தில் சில்லுகருப்பட்டி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்று தேசிய விருதுகளை குவித்த திரைப்படம் ‘அந்தாதுன்’. இந்த படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தை முன்னணி இயக்குனர் தியாகராஜன் இயக்கி வருகிறார். நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரன் ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார்.

சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய நடிகை ஒருவர் இணைந்துள்ளார். அதன்படி சில்லுகருப்பட்டி படத்தில் நடித்து புகழ்பெற்ற லிலா சாம்சன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Exit mobile version