காந்தி பிறந்த நாளில் கதர் ஆடைகளை உடுத்துவோம் : முதலமைச்சர் ஸ்டாலின்

மகாத்மா காந்தி பிறந்த நாளில் கதராடைகளை உடுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காந்தி பிறந்தநாளில் கதர் ஆடைகளை உடுத்துவோம், நமது நெசவாளர்களை உயர்த்துவோம். தமிழகத்தில் உள்ள கதரங்காடிகளில் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் கதர் துணிகள் விற்கப்பட்டு வருகிறது. அந்நியர் ஆதிக்கத்திற்காக காந்தியடிகள் கையில் எடுத்த ஆயுதமாக கதர் இருந்தது என்றார்.

Exit mobile version