மதுக்கடைகளில் நிரம்பி வழிந்த மதுப்பிரியர்கள்.. நோய்தடுப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டப்பட்ட அவலம்..

கோவை: கோவையில் அரசின் நோய்தடுப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, மதுக்கடைகளில் நிரம்பி வழிந்த மதுப்பிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடுமுழுவதும் கொரானாவின் இரணடாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் அரசு பல்வேறு நோய்தடுப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதனொருபகுதியாக இரவு ஊரடங்கு மற்றும் அனைத்து ஞாயற்று கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை சனிக்கிழமை மே 1, அரசு விடுமுறை என்பதாலும், நாளை மறுநாள் ஞாயற்றுக்கிழமை முழுஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் மதுபானகடைகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் மதுபிரியர்கள் இரண்டு நாட்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்கள் வாங்கி சேமித்துவைக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோவை பேரூர் மற்றும் ஆவராம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான மதுபான கடைகளில் முககவசமணியாமலும், தனிமனித இடைவெளியில்லாமலும் மதுபிரியர்கள அரசின் நோய்தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர்.

Exit mobile version