வருகின்ற 15 ஆம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ கழிவு மணல்களை அகற்றும் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். உடன் கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நாராயணன் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளில் போது பள்ளங்கள் எடுக்கப்பட்டு அதில் இருக்கும் கழிவு மணலை அகற்றுவதற்கு ITDC என்ற ஒப்பந்ததாரரிடம் பணம் செலுத்தி முறையான ரசீது பெற்று கழிவு மணலை ஏற்றி வந்த வாகனத்தை கனிம கடத்தல், கனிம திருட்டு போன்ற இரண்டு பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த வாகனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாகனம் சிறைப்படுத்தப்பட்ட போது கொடுத்த ரசீதில் ஏற்றும் இடம் கோடம்பாக்கத்தில் இருந்து ஐயப்பன்தாங்கல் வரை 170 கிலோமீட்டர் எனவும் அதேபோன்று வாகனத்தின் பயண நேரம் இரவு 11:30 முதல் அதிகாலை 4:30 மணி வரை என 5 மணி நேரம் என குறிப்பிட்டுள்ளது எனவும் இந்த ரசீதை வழங்கிய ITDC என்ற நிறுவனம் தான் எனவும் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பணி ஒப்பந்தத்தை ITDC மேற்கொள்கிறது. இந்த நிறுவனம் தான் ரசீது வழங்கியது அதனை விசாரிக்காமல் வாகனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. மெட்ரோ ரயிலுக்காக பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து நேரடியாக வாகன உரிமையாளர்களை எப்படி கழிவு மணலை ஏற்றி கொள்ளையடிக்க முடியும். வாகனத்தை பார்க்காமல் நிறுவனம் ரசீது வழங்கியுள்ளது. ரசீதில் பிழை என்றால் ஒப்பந்ததாரரின் மீது இரு பிரிவுகளில் வழக்கு செய்யாமல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். மெட்ரோ பணிகளில் இருந்து எடுக்கப்படும் கழிவு மணலுக்கு அரசு நிர்ணயம் செய்த பணம் டன் ஒன்றுக்கு 28 ரூபாய் ஆனால் மெரினா, திருவான்மியூர், அடையார் போன்ற கடலுக்கு அருகாமையில் மெட்ரோ வேலை நடைபெறும் பகுதிகளில் எடுக்கப்படும் மணல் 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது அரசுக்கு தெரியாதா கடற்கரை சார்ந்த பகுதியில் எடுக்கப்படும் கழிவு மணலை சென்னையில் நடைபெறும் ஏராளமான கட்டிடப் பணிகளில் பயன்படுத்தப்படுவது அரசுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் அதனை ஆதரிக்கிறதா என அரசு தனது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் 15ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் மெட்ரோ வேலையில் ஈடுபடும் லாரிகள் ஓடாது எனவும் விடுபட்ட வாகனங்களை விடுவிக்க வேண்டும் மேலே உள்ள முறைகேடுகளை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் தமிழக முழுவதும் மெட்ரோ ரயில் ஈடுபடும் லாரிகள் இயங்காது என கூறினர். முதலமைச்சர், கனிமவளத்துறை அமைச்சர், கனிமவளத்துறை இயக்குனர் இடம் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
சென்னையில் நடைபெறும் மெட்ரோ வேலைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. மெட்ரோ பணியின் போது எடுக்கப்படும் மணல்களை விற்பனை செய்து வருகிறார்கள். லட்ச கணக்கான மெட்ரிக் டன் மணல்களை விற்பனை செய்து வருகிறார்கள் என கூறினார். தமிழகத்தில் கனிமவள கொள்ளை நடத்து வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகவிற்கு கனிமவளங்கள் எடுத்து செல்லப்படுகிறது. பசுமை வரி என்ற பெயரில் கனிமவள கொள்கை நடத்து வருகிறது. நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல கூடாது என ஆனால் அதையும் மீறி அவர்கள் எடுத்து செல்கின்றனர். 1371 பேருக்கு தான் கிரசரில் மணல் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் 4000 பேருக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. கனிம வளத்துறை ஆணையாள்கள் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் 50 த்திற்கும் மேற்பட்ட இடங்களில் மெட்ரோ மணல்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடையாறு, திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் எடுத்த மணல்கள் எங்கே எனவும் புதிதாக இந்த துறைக்கு வந்த அமைச்சர் ரகுபதி இதை பற்றி கேட்டால் தெரியவில்லை என்கிறார். எப்போது கேட்டாலும் புதுக்கோட்டையில் இருக்கிறேன் என சொல்கிறார். சென்னையில் மழை பெய்தால் வெளிநாட்டில் இருந்து முதல்வர் விசாரிக்கிறார். ஆனால் சென்னையில் உள்ள இப்படி மணல் கொள்ளை நடப்பது முதல்வருக்கு தெரியாதா என தெரியவில்லை என தெரிவித்தனர். இன்று அல்ல கிட்டதட்ட 15 ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தான் தமிழகத்தில் கிரஷ்கர்கள் நடைபெறுகிறது. அதனால் தான் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றிக்கொண்டே வருகிறார்கள் என தெரிவித்தனர். பின்னர் விருகம்பாக்கத்தில் லாரி பிடிப்பட்டது குறித்து காவலர்கள் வழங்கிய ரசீதை ஆதாரத்துடன் செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தனர்.
பின்னர் பேசிய கனிமவள லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நாராயணன், Adjustment செய்துதான் லாரி உரிமையாளர்கள் லாரிகளை இயக்குகிறார்கள், அப்போ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கனிமவளத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். எங்கள் மீது தவறு இருக்கிறது. எங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.