மாளவிக்கா மோகனை காலி செய்துவிடுவாரா லாஸ்லியா – ஆர்மிகளுக்கிடையே காரசாரமான மோதல்

மாளவிக்கா மோகனுக்கே டப் கொடுக்கும் லாஸ்லியா. படத்திற்க்கு மேல் படத்தை புக் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

பிக்பாஸ் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அவர் பிக்பாஸ் வீட்டினுள் கவின் மேல் கொண்ட காதலால் சர்ச்சைக்குள்ளானார். ஆனால் அவர்கள் பிக்பாஸ்- க்கு பின்னர் காதலில் இருக்கிறார்களா என்பதே அவர்களின் ரசிகர்களுக்கான பெரிய சந்தேகம். இந்த சூழலில் லாஸ்லியா தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

அனைத்து பிக்பாஸ் நட்ச்சத்திரங்களை போலவே இவரும் வெள்ளித்திரையில் தன் தடம் பதித்துள்ளார். இவரின் முதல் படமானது ஆரியாவுடன் கமிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து இவர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் லாக்டவுனால் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாக உள்ள படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடத்துள்ளது. இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் எனவும் இதை சரவணன் என்பவர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளித்திரையில் காலடி வைத்துவிட்டால் போட்டோஷூட்கள் நிச்சயமாக நடத்தபட வேண்டும். அதற்க்கு ஏற்றார்போல் லாஸ்லியாவும் இணையத்தை தன் அழகால் ஆண்டு வருகிறார்.

தன் முதல் பட வாய்ப்பையே ரஜினி பட வாய்ப்பாக அமைத்து கொண்டவர் மாளவிக்கா மோகன். போட்டோஷூட்டில் இவரை மிஞ்ச ஆளில்லை. இவர் தன் இரண்டாது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னனி நடிகையானார். ஆனால் தன் முதல் இரண்டு படங்கள் ரிலிஸ் ஆவதற்க்கு முன்பே மூன்றாவது படத்தில் கமிடான லாஸ்லியா இவரையும் காலி செய்துவிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version