தமிழக மீனவர்கள் வலையில் சிக்கிய பாஜக சின்னம் மற்றும் காவி நிறத்திலான அதிசய தாமரை நண்டு.

வேதாரண்யம் அருகிலுள்ள கோடியக்கரை கடல் பகுதியில் காவி நிறத்தில் தாமரை வடிவிலான நண்டு கிடைத்துள்ளது மீனவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் அருகில் உள்ள கோடியக்கரை பகுதியில், உள்ளூர் மீனவர்கள் மட்டுமல்லாது, தூத்துக்குடி, ராமநாதபுரம், பாம்பன் போன்ற பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்து, அங்கேயே தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

தினசரி மீன் பிடித்து வரும் இவர்கள், இன்று காலை அதிக அளவு மீன்கள் மட்டுமல்லாது நண்டுகளுடனும் மீனவர்கள் கரை திரும்பினர். இதில் வாளை,சங்கரா, பன்னா, சீலா, புள்ளி நண்டு, நீலக்கால் நண்டு போன்றவை அதிகம் கிடைத்தன.

இந்நிலையில், பாம்பனைச் சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் புது வகையான அதிசய நண்டு கிடைத்துள்ளது.இந்த அதிசய நண்டின் மேல்பாகம் காவி நிறத்திலும், அடி பாகத்தில் தாமரை பூ போன்ற வடிவத்துடன் காவி மற்றும் பச்சை நிறத்தில் உள்ளது.

காவி என்பது பாஜகவின் அடையாளமாக உள்ள நிலையில், பாஜகவின் சின்னமாக தாமரை உள்ளது. இது இரண்டையும் ஒன்றாக கொண்ட ஒரு புதிய நண்டு கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளி நண்டு, நீலக்கால் நண்டு, கல் நண்டு, கிளி நண்டு என பலவகையான நண்டுகள் உள்ள நிலையில், தாமரை பூ வடிவிலான இது போன்ற நண்டை இதுவரை அப்பகுதியில் யாரும் பார்த்ததில்லை என மீனவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version