மு.க.அழகிரி விடுதலை

வட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபடுவதாக கூறி வட்டாட்சியர் காளிமுத்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது இருதரப்பிற்கும் வாக்புவாதம் ஏற்பட்டு மு.க.அழகிரி தரப்பினர் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை பலகட்டமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய 4 பேர. இறந்து விட்ட நிலையில் அழகிரி உட்பட 17 பேரை மதுரை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

Exit mobile version