ஆத்தாடி…!! 1 சாண்ட்விச் வாங்க 130km பயணம் செய்யும் நபர்… அதுவும் ஹெலிகாப்ட்டர்ல… வைரலாகும் வீடியோ…!!

பிரிட்டனில் நபர் ஒருவர் சாண்ட்விச் வாங்குவதற்காக ஹெலிகாப்டரில் 130 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் பிரிட்டனில் ஊரடங்கு விதிகள் கடுமையாக உள்ளது.

இந்நிலையில் நபர் ஒருவர் தனக்கு பிடித்த சாண்ட்விச்சை வாங்குவதற்காக 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹெலிகாப்டரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருக்கும் நபர் ஹெலிகாப்டரில் Manchester என்ற பகுதியிலிருந்து Chipping Farm Shop என்ற கடைக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் கடையில் தனக்கு மிகவும் பிடித்த Roast beef in caramelised onion gravy barm சாண்ட்விச்சை வாங்கி செல்கிறார்.

ஹெலிகாப்டரில் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர் வந்ததை Chipping Farm Shop இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டதும் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் பிரிட்டனில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும்பொழுது இவர் ஊரடங்கு விதிகளை மீறியுள்ளார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சிலர் எங்களால் இப்படி வாங்க முடியவில்லையே என்று கூறியுள்ளனர். இந்நிலையில் வீடியோவில் இருக்கும் அந்த நபர் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதால் பிரிட்டன் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version