ஜம்மு-காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராகிறார் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரின் புதிய  துணைநிலை ஆளுநராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மனோஜ் சின்ஹா நியமனம்.

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு, நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்தார்.அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பா.ஜ.க.வைச் சேர்ந்த மனோஜ் சின்ஹாவை துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளார்.

மனோஜ் சின்ஹா, உத்திரப் பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார்.உத்திரப் பிரதேச மாநிலம் காஸிபூர் லோக்சபா தொகுதியில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் ரயில்வே துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Exit mobile version