தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முககவசம் அணிய வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முறையாக முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தொற்று எண்ணிக்கை 500- ஐ கடந்தால் முககவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று (11.4.23) தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 400- ஐ கடந்த நிலையில், இன்று அல்லது நாளை பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மீண்டும் முககவசம் கட்டாயம் என்ற அறிவிப்பை அரசு அறிவிக்க உள்ளது.

Exit mobile version