உலகம் முழுவதும் பரவும் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படவில்லை கொரோனாவிலிருந்து தப்பிக்க தற்போது ஒரே வழி மாஸ்க், கிலோவ்ஸ், போன்றவை பயன் படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணி கையுறை மற்றும் சர்ஜிக்கல் கையுறைகளை பயன் படுத்திவருகின்றனர்.அதில் இந்த சர்ஜிக்கல் கையுறைகளை பயன்படுத்த சில வழி முறைகள் உள்ளன. அதை மருத்துவர்களும் அரசாங்கங்களும் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.
ஒரு முறை பயன்படுத்திய சர்ஜிக்கல் கையுறையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
பயன் படுத்திய கையுறைகள், மாஸ்க் மற்றும் PPE உடைகளை முறையாக அப்புறப்படுத்துவது கட்டாயம் ஆகும். அப்படி அப்புறப்படுத்தவில்லை எனில் நோய் பரவும் அபாயம் உள்ளது என்ற கவலை நீடித்து வரும் நிலையில், மும்பையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவிமும்பை நகரின் குற்றப்பிரிவு போலிசார் இன்று கும்பல் ஒன்றை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து, அதை கழுவி மீண்டும் புதிது போலவே மாற்றி விற்பனை செய்து வந்துள்ளது அந்த கும்பல். ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று டன் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட கையுறைகளை அவர்களிடம் இருந்து போலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கையுறைகளை எத்தனை நாட்களாக விற்று வருகின்றனர், எத்தனை கையுரைகளை விற்றுள்ளனர், போன்ற தகவல்கள் குறித்து இன்னும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.