செப்டம்பர் 1 முதல் மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்…

கர்நாடகா மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் வுகான் நகரில் கடந்த வருடம் பரவிய கொரோனா இன்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் பொது போக்குவரத்தானா பஸ், ரயில், விமானங்கள் போன்ற அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல கட்டங்களாக தளர்வுகளுடன் அந்தந்த மாநிலங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் கர்நாடக மாநிலத்தில் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்து அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஆலோசித்து வருவதாகவும் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version