#JUST IN அசைவப் பிரியர்களே உங்களுக்காக… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!

அசைவம், மது எடுத்துக்கொண்டால் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்தியை நம்புகிறார்கள் என்பதால், இந்த வாரம் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பல் மருத்துவமனை சார்பில் நடமாடும் பல் மருத்துவ வாகன சேவையை தொடங்கி வைத்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மது அருந்த முடியாது, அசைவம் சாப்பிட முடியாது என யாரோ கூறிய வதந்திகளை நம்பி, மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில்லை. எனவே அவர்களுக்காக இந்த வாரம் தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

2வது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மெகா தடுப்பூசி முகாமின் போது, கிட்டதட்ட 11 லட்சம் பேர் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் எனத் தெரிவித்தார்.

Exit mobile version