5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டால் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனிமனித இடைவேளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version