ஆன்லைன் வகுப்புகள் நடந்தால் மட்டும் போதுமா? ஆன்ட்ராய்டு போன் வேண்டாமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டுவரும் நிலையில் செல்போன் இல்லாத காரணத்தினால் நித்ய ஸ்ரீ தற்கொலை குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமும்,தொலைக்காட்சி வழியாகவும் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் செல்போன் மற்றும் தொலைக்காட்சி வசதி இல்லாத வீடுகளில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியாத நிலையுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் நித்யஸ்ரீ என்ற மாணவி ஆன்லைன் வகுப்பிற்கு ஆன்ட்ராய்டு போன் இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்து பள்ளி மாணவர்கள் வீடுகளிலும் ஆன்ட்ராய்டு போன் இருக்கிறதா?அப்படியே இருந்தாலும் அவர்களின் வீடுகளில் இணையசேவைக்கான பணம் மாதாமாதம் செலுத்தும் வசதி உள்ளதா? ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் எப்படி ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துவார்கள்?என்று தமிழக அரசு எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் இருந்ததே நித்யஸ்ரீ மரணத்திற்கு காரணம் என்று கூறினார் .மேலும் இது அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் சென்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் இதை நான் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version