மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர்.
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல அரசியலாக்கி கட்சி தலைவர்களும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் உடலானது மருத்துவமனையின் நடைமுறைகள் அனைத்தையும் தாண்டி இன்று காலை உறவினர்களின் கையில் ஒப்புவிக்கப்பட்டது. இதன் பின்னர் அவரின் உறவினர்கள் அவரின் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவரது உடலானது இன்று டெல்லியில் இருந்து அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் இவரின் உடலை கண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த பலரும் நேரில் சென்றிருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி நேரில் சென்று பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் சொந்த ஊரான பிஹாரில் அவரது உடல் நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி பஸ்வான் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று பாராளுமன்ற கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.