பீகாரில் ரூ.540 கோடி மதிப்பிலான 7 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்…

பீகாரில் காணொளி மூலமாக பலரும் கலந்துகொள்ள மோடி வரிகள் பீகாரின் வளர்ச்சிக்கு, சுமார் 540 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 திட்டங்களுக்குஅடிக்கல் இட்டுள்ளார்.

பீகாரில் நகர்ப்புற வளர்ச்சிக்காக சுமார் 540 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் பங்கேற்க உள்ளார்.

நிகழ்ச்சியில், நான்கு நீர் வழங்கல் திட்டங்கள், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் மற்றும் ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றிற்கு, மோடி அடிக்கல் நாட்டுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version