வேளாண் சட்டம்… மத்திய அரசின் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு!

மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை” என்று மத்திய அரசின் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் பெரு முதலாளிகளுக்கு பயன் அளிக்கும் விதமாகவும் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் மேலும் பலவித போராட்டங்கள் மூலம் தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானாவில் டிராக்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் தான் கலந்துகொண்டது தொடர்பான வீடியோவுடன் ராகுல் காந்தி டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “விவசாயிகள் நாட்டுக்கு உணவு பாதுகாப்பை கொடுத்தனர். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை” என்று மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version