வேலை வாங்கித் தருவதாக மோசடி… எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி வழக்கு..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளர் மணி, செல்வக்குமார் ஆகியோர் மீது சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் பணமோசடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version