தன் உணவகத்தில் சாப்பிட்டால் ஐ-பேட், கார் பரிசு இணையத்தை கலக்கும் யூ-டியூபர்

தனது உணவகத்தில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் அறிவித்து இணையத்தை அசத்தும் மிஸ்டர் பீஸ்ட் யூடியூபர்.

அமெரிக்கா :

யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தனது உணவகத்தில் சாப்பிடும் மக்களுக்கு ஐபாட்கள், ஏர்போட்கள் மற்றும் பரிசுத் தொகையும் வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது அமெரிக்க முழுவதும் மிஸ்டர் பீஸ்ட் பர்கர் என்ற பாஸ்ட் புட் உணவகத்தை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. எனவே இந்த தொடக்கத்தின் அதிரடியாக இங்கே உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு பணம், ஏர்போட்கள், ஐபாட்கள், கார் மற்றும் பிற கேஜெட்களைப் பரிசாக வழங்கியுள்ளது.

மிஸ்டர் பீஸ்ட் தனது சேனலில் சனிக்கிழமை அன்று “ஐ ஓபன் ஏ ரெஸ்டாரன்ட் தேட் பே யூ டூ ஈட் அட் இட்” என்ற ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் இது தான் வட கரோலினாவில் “உலகிலேயே முதல் இலவச ரெஸ்டாரென்ட்” என்ற பெயரையும் அவர்கள் மாட்டி வைத்தனர். இதையடுத்து இந்த பெயரை பார்த்த மக்கள் அனைவரும் இங்கே சாப்பிடுவதற்காக வெளியே க்யூ கட்டி நிற்கத் தொடங்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே சாப்பிடுவதற்காக நாள் முழுவதும் வரிசையில் நின்றுள்ளனர்.

இங்கே வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பர்கர் மற்றும் ப்ரை உணவுகளுடன் 100 டாலர் பணத்தையும் பரிசுத்தொகையாக வழங்குவதாக அந்த வீடியோவில் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் பல அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு ஐபாட்கள், ஏர்போட்கள் மற்றும் பிற விலையுயர்ந்த கேஜெட்களையும் அவர்கள் வழங்கியுள்ளனர். ஒரு வாடிக்கையாளருக்கு அவருடைய கீறப்பட்ட காருக்கு பதிலாக புதிய காரை வழங்கி மிஸ்டர் பீஸ்ட் ரெஸ்டாரென்ட் அன்றைக்கு ஒரு புதிய அதிரடியை செய்துள்ளது.
மக்கள் வரிசை வரிசையாக ரெஸ்டாரென்ட் முன் குவிய துவங்கி உள்ளனர். மக்களின் கூட்டம் அதிகமாக ஆனதால் காவல் துறை தலையிட ஆரம்பித்து உள்ளது. மக்களிடையே நிறைய தள்ளு முள்ளுகள் ஏற்பட்டதால் மிஸ்டர் பீஸ்ட் அந்த நாளில் கடையை மூட வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்க முழுவதும் 300 ‘மிஸ்டர் பீஸ்ட் பர்கர்’ உணவகங்களை தொடங்குவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அறிவித்தார்.

Exit mobile version