உதகையில் 2வது சீசனுக்காக விறு விறுப்பாக நடைபெற்றுவரும் வண்ண மலர்கள் நடவும் பணிகள்!

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் 2 வது சீசனுக்காக 75 வகையான வண்ண மலர்களை நடவும் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உதகையில் 2வது சீசனுக்காக விறு விறுப்பாக நடைபறும் வண்ண மலர்கள் நடவும் பணிகள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்,மே மாதங்கள் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் என இரு முறை முறை வண்ணமயமான மலர்க்கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தாண்டு கோடை விடுமுறையில் ஊட்டிக்கு செல்லமுடியாமல் பல சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த சூழலில் தான் தற்போது கொரோனா தொற்று வருகின்ற செப்டம்பர், அக்டோபர் குறைந்து விடும் என்ற நம்பிக்கையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2 வது சீசனுக்காக வண்ணமயமான மலர்களை நடவு செய்யும் பணிகளில் ஊழியர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலர்களின் நாற்றுகள் உள்ளுரில் வாங்கியும் மற்றும் கடந்த சீசனில் மலர் செடிகளில் இருந்த விதைகள் சேகரித்து மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றனர்.

Exit mobile version